தமிழகம்

தமிழக விவசாயிகளின் நலன் காக்க டிசம்பரில் மாநாடு: தமிழிசை சவுந்தரராஜன் திருச்சியில் அறிவிப்பு

செய்திப்பிரிவு

தமிழக விவசாயிகளின் நலன் காக்க டிசம்பரில் மாநாடு நடத்தப்படும் என்றார் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

பாஜக-வுக்கு உறுப்பினர் சேர்ப்பதற்கான பயிற்சி முகாமில் கலந்துகொள்ள நேற்று திருச்சி வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் வைகோ, மோடி மீதும் அவரது செயல்பாடுகள் மீதும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது வேதனையளிக்கிறது. பாஜகவை விமர்சிக்க குஷ்புவுக்குத் தகுதியில்லை. தமிழக சட்டமன்றத்தில் இனியாவது ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறவேண்டும். அது, இனியும் துதிபாடும் மன்றமாக செயல்படக்கூடாது.

விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பாற்றப் பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் கட்சி சார்பற்ற விவசாயிகள் மாநாடு டிசம்பரில் சென்னை அல்லது தஞ்சையில் நடைபெறும்.

கர்நாடகாவில் புதிய அணை கட்டும் விஷயத்தில் தமிழக பாஜக தமிழக விவசாயிகளின் பக்கம்தான் இருக்கும். கர்நாடகாவில் அணைகட்ட மத்திய அரசு இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை என்றார்.

வைகோவுக்கு எச்.ராஜா எச்சரிக்கை

பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங்கை விமர்சிப்பதை மதிமுக பொதுச்செயலர் வைகோ நிறுத்திக்கொள்ள வேண்டும். அவருக்கு நாவடக்கம் தேவை. இல்லாவிட்டால் பேசும் இடத்தில் இருந்து அவர் பாதுகாப்பாகத் திரும்பிச் செல்ல மாட்டார் என்று பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா தஞ்சாவூரில் நேற்று நிருபர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.

SCROLL FOR NEXT