சென்னை உயர் நீதிமன்ற வளா கத்தை முழுமையாக கண்காணிக் கும் வகையில் சிஐஎஸ்எப் போலீஸாரின் கட்டுப்பாட்டில் உள்ள 200 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தொடங்கி வைத்தார்.
சென்னை உயர் நீதிமன்றம் மற் றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உட்பட மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங் களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதன்படி, சென்னை உயர் நீதி மன்றத்தில் சிஐஎஸ்எப் போலீஸா ரின் பாதுகாப்பு வளையத்துக்குள் புதிதாக 200 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள் ளன. இந்த கண்காணிப்பு கேமராக் களையும், இதற்கான கட்டுப்பாட்டு அறையையும் நேற்று மதியம் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச் சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சிஐஎஸ்எப் இயக் குநர் தலைவர் ஓ.பி.சிங் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 52 கண்காணிப்பு கேமராக்கள் பொருத் தப்பட உள்ளதாகவும், விரைவில் அவை செயல்பாட்டுக்கு வரும் என்றும் சிஐஎஸ்எப் கமாண்டன்ட் அதிகாரி ராம் தெரிவித்தார்.