திருவாரூரை அடுத்துள்ள நீலக் குடியில் இயங்கிவரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக இணைய தளம் முடக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் செயல் பட்டுவரும் 7 பல்கலைக்கழகங் களில், திருவாரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகமும் ஒன்று. இந்த பல்கலைக்கழகத்தில் இந்தி யாவின் பல்வேறு மாநிலங் களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், இப்பல்கலைக் கழத்தின் இணையப் பக்கம் (வெப்சைட்) நேற்று மாலை சிறிது நேரம் முடக்கப்பட்டிருந்தது. இணையதள முகவரியான சியுடிஎன் (www.cutn.com) என்று டைப் செய்தால், அது இணையப் பக்கத்துக்குள் செல்லாமல் கஷ் மீரி தெவ்பா (kashmiri thvepha) என்று ஆங்கிலத்தில் வந்தது.
இதுகுறித்து தகவலறிந்த பல்கலைக்கழக துணைவேந்தர் ஆதித்ய பிரசாத் தாஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை யினர், இணையதளத்தில் ஊடுரு வியிருந்த அந்த வார்த்தைகளை நீக்கி இணையப் பக்கத்தை செயல்பட வைத்தனர்.
இதுகுறித்து பல்கலைக்கழக வட்டாரத்தில் விசாரித்தபோது, “வெப்சைட் முடக்கப்பட்ட 10 நிமிடங்களிலேயே அதை சரி செய்து செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துவிட்டோம். கஷ்மீரி தெவ்பா என்ற வார்த்தையைப் பார்க்கும்போது, இது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கைவரிசையா என்று எண்ணத் தோன்றுகின்றது. இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், தமிழக காவல்துறைக்கும் தகவல் கொடுத் துள்ளோம் என்றனர்.