தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள 'மாதி' புயல் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன், மண்டபத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதித்து டோக்கன்கள் வழங்கப்படவில்லை.
தென் மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது. அதற்கு 'மாதி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாம்பனில் இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்பதால் மீனவர்களுக்கு கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல அனுமதிக்க மறுக்கப்பட்டு ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்களுக்கு கடலுக்குச் செல்ல டோக்கன் அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.
பாம்பன் கடற்பகுதியில் அதிகப்பட்சமாக 24 கி.மீ வேகத்தில் சனிக்கிழமை காற்று வீசியதாக பாம்பன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
மேலும் வங்கக் கடலில் சென்னையில் இருந்து வட கிழக்கில் 500 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது மாதி புயல்.
மாதி புயலால் அந்தமான்-நிகோபார் தீவுகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கன மழை பெய்யும் என்றும் தமிழகம் புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.