தமிழகம்

ஜூலையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தத் தயார்: மாநில தேர்தல் ஆணையர்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஜூலையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தத் தயார் என்று மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் கூறியுள்ளார்.

மாலிக் பெரோஸ்கான் தலைமையில் உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மாலிக் பெரோஸ்கான், ''தமிழகத்தில் ஜூலை மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தயாராக உள்ளோம். இதை நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளோம்.

புகைப்படங்களுடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி நிறைவு பெற்ற நிலையில் புதிய வாக்காளர்களை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது'' என்றார் மாலிக் பெரோஸ்கான்.

SCROLL FOR NEXT