சென்னை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத் துக்கு எதிரே நடைபாதை சாலையில் அமர்ந்து 2 ஆயிரத் துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் நேற்று காலை முதல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் இளைஞர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மாலை 5 மணி முதல் 6 மணிவரை முகத்தில் கைக்குட்டையை கட்டிக் கொண்டு மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் வரவேண்டும் என கோரிக்கை முழக்கமிட்டனர். இரவு போராட்டம் நீடித்ததால் திடீரென அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இளைஞர்கள் செல்போன் லைட் வெளிச்சத்தில் போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் மின் விநியோகம் வழங்கப்பட்டது.