சட்டப்பேரவை மாற்றுத் தலைவர்களாக அதிமுக எம்எல்ஏ.க்கள் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் இது தொடர்பாக பேசிய பேரவைத் தலைவர் பி.தன பால், ‘‘சட்டப்பேரவை மாற்றுத் தலைவர்களாக சு.ரவி (அரக் கோணம்), பி.எம்.நரசிம்மன் (திருத் தணி), வி.வி.ராஜன் செல்லப்பா (மதுரை வடக்கு), எஸ்.குண சேகரன் (திருப்பூர் தெற்கு), தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி), பி.வெற்றிவேல் (பெரம்பூர்) ஆகியோர் செயல்படுவார்கள்’’ என அறிவித்தார்.
பேரவைத் தலைவர், பேரவை துணைத் தலைவர் ஆகியோர் இல்லாதபோது சட்டப்பேர வையை நடத்த மாற்றுத் தலைவர் கள் நியமிக்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது மாற்றுத் தலைவர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் ஓ.கே.சின்னராஜ், பி.எம்.நரசிம்மன், வி.வி.ராஜன் செல்லப்பா, எஸ்.செம்மலை, தங்கதமிழ்ச்செல்வன், பி.வெற்றிவேல் ஆகியோர் மாற் றுத் தலைவர்களாக நியமிக்கப் பட்டிருந்தனர். அதில் ஓ.கே.சின்ன ராஜ் (மேட்டுப்பாளையம்), எஸ்.செம்மலை (மேட்டூர்) ஆகியோர் ஓபிஎஸ் அணிக்குச் சென்றதால் அவர்களுக்குப் பதிலாக சு.ரவி, எஸ்.குணசேகரன் ஆகியோர் மாற்றுத் தலைவர்களாக அறி விக்கப்பட்டுள்ளனர்.