அந்தமான் அருகே 'அஷோபா' புயல் மையம் கொண்டுள்ளதால், பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் தென்கிழக்கு அந்தமான் அருகே காற்றழுத்த நிலையாக உருவெடுத்து, பிறகு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, அடுத்த கட்டமாக புயலாக உருவெடுத்துள்ளது. இந்தப் புயலுக்கு 'அஷோபா' என்று பெயரிடப்பட்டுள்ளது.
அந்தமான் அருகே 'அஷோபா' புயலும், இலங்கை அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையும் உருவாகியுள்ளதால் பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, மீனவர்கள் ஆழமான பகுதிகளில் சென்று மீன் பிடிக்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.