தங்கம் கடத்தியதாகக் கூறி திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் துணை குடியேற்ற அதிகாரி பாலாஜி பாஸ்கர் கைது செய்யப்பட்டார்.
ஆய்வின்போது பாலாஜி சுமார் 1.5 கிலோ எடை கொண்ட தங்க பிஸ்கட்டுகளைத் தன்வசம் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரை சுங்க வரி ஏய்ப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
கோலாலம்பூரில் இருந்து ஏர் ஆசியா விமானத்தில் பயணித்த பயணி சாதிக் அலி என்பவர் தங்க பிஸ்கட்டுகளை பாலாஜி பாஸ்கர் என்ற குடியேற்ற அதிகாரியிடம் வெளிப்படையாகவே கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அவரும் சுங்க வரி ஏய்ப்பு புலனாய்வு பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பிடிபட்ட தங்க பிஸ்கட்டுகளின் மதிப்பு ரூ.43 லட்சம் ஆகும்.
உளவுத்துறையின் சார்பாக திருச்சி குடியேற்றப் பிரிவில் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தவர் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.