தமிழகம்

அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் மேற்படிப்பு: சென்னையில் வழிகாட்டி கண்காட்சி

செய்திப்பிரிவு

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து ஆகிய வெளிநாடுகளில் மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் சென்னையில் நேற்று வழிகாட்டி கல்விக் கண்காட்சி நடந்தது.

ஐடிபி எஜுகேஷன் இந்தியா கல்வி ஆலோசனை நிறுவனம் நடத்திய இந்த கல்விக் கண் காட்சியில் மேற்குறிப்பிட்ட நாடு களைச் சேர்ந்த 34 பல்கலைக் கழகங்கள் பங்கேற்றன. வெளி நாட்டு கல்வி முறை, மாணவர் சேர்க்கை விதம், பல்வேறு விதமான கல்வி உதவித் தொகை, விசா நடைமுறை குறித்து வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் நிர்வாகிகள் மாணவ - மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த கல்விக் கண்காட்சியைப் பார்வையிட்டனர். சென்னையை தொடர்ந்து கோவையில் வருகிற 27-ம் தேதி இதுபோன்ற கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

SCROLL FOR NEXT