ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக மெரினா, பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
மெரினா கடற்கரை உட்புற சாலைக்கு செல்லும் அனைத்து வழிகளும் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு அடைக்கப்படும். 10 மணிக்கு பின்னர் சாலைக்குள் இருக்கும் வாகனங்கள் வெளியே செல்ல நினைத்தால் கலங்கரை விளக்கம் வழியாக மட்டுமே செல்ல முடியும்.
செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 2 மணி வரை காமராஜர் சாலையில் காந்தி சிலை முதல் போர் வீரர்கள் நினைவு சின்னம் வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.
காமராஜர் சாலையில் இணையும் அனைத்து சாலைகளும் அடைக் கப்படும். பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் 6-வது அவென்யூ வில் இரவு 10 மணி முதல் வாகன போக்குவரத்து தடை செய்யப்படும்.
மகாத்மா காந்தி சாலை 7-வது அவென்யூ சந்திப்பில் இருந்து வேளாங்கண்ணி ஆலயத் துக்கு செல்ல வாகனங்கள் அனு மதிக்கப்பட மாட்டாது.
ராணி மேரி கல்லூரி வளாகம், சுவாமி சிவானந்தா சாலை, சேப்பாக்கம் மற்றும் லாயிட்ஸ் சாலையில் ரயில்வே பார்க்கிங் பகுதிகள், டாக்டர் பெசன்ட் சாலை, லாயிட்ஸ் சாலை, பெசன்ட் நகரில் 2, 3, 4, 5-ம் அவென்யூ மற்றும் பெசன்ட் நகர் 3, 4-வது பிரதான சாலைகளில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
குடித்து விட்டு வாகனம் ஓட்டு பவர்கள், வீலிங் செய்பவர்கள், பெண்களிடம் அத்துமீறுபவர்கள், விதிமுறைகளை மீறி செயல்படும் ஓட்டல் நிர்வாகிகள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.