தமிழகம்

தப்பான மாயையை மழை உடைத்தது - ‘தி இந்து’ தமிழ் ஆசிரியர் அசோகன்

செய்திப்பிரிவு

பொழுதுபோக்கு, பரபரப்புக்காக ஊடகங்கள் செயல்படுவதாக வாசகர்கள் விமர்சித்தனர். பிரச்சினைகளை மட்டுமே எழுதினால் போதாது, அதற்கு தீர்வும் சொல்ல வேண்டும் என வாசகர்கள் கேட்டனர். அதற்கும் தீர்வு கண்டதால் அடுத்த கட்டமாக களத்தில் இறங்கி செயல்பட வேண்டும் என கோரினர். அதன் வெளிப்பாடுதான் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண முகாம் அமைத்து உதவினோம்.

பொதுவாக, சினிமா துறை பற்றி ஒரு மதிப்பீடு உள்ளது. அவர்கள் ஏ.சி. அறையில் வசிப்பவர்கள். அவர்களுக்கு உலகம் தெரியாது என கூறுவர்.

அவர்கள் மனதில் ஈரம் உள்ளது. அவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். ஆனால், அவர்களை நேரடியாக களத்தில் இறங்க உத்வேகம் அளித்தது இந்த மழை. இதன் மூலம், அவர்கள் மீதான ஒரு தப்பான மாயை உடைந்தது.

காவல்துறையின் சக்தியை நல்லதுக்கும் பயன்படுத்தியதை இந்த நிவாரண முகாமில் நாங்கள் பார்த்தோம். அதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் காவல்துறை உதவி ஆணையர் பீர் முகம்மது. அவர் எங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார்.

இந்த தன்னார்வ பணியில் ஈடுபட்ட நல்ல உள்ளங்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் செய்கின்ற பணியை முழு ஆர்வத்துடன் செய்ய வேண்டும். இப்பணியில் ‘தி இந்து’, புதிய தலைமுறை, அகரம் அறக்கட்டளை இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

SCROLL FOR NEXT