தமிழகம்

மார்ச் 30 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்

செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 6 மாநிலங்களில் மார்ச் 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

லாரி உரிமையாளர்கள் அவசர பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பின்னர், தென்னிந் திய லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகப்பா செய்தியாளர்களிடம் கூறியதா வது:

காப்பீடு கட்டணம் 50 சதவீதம் உயர்வு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியால் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் லாரி உரிமையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எங்களது பாதிப்பை உணர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி மார்ச் 30-ம் தேதி நள்ளி ரவு முதல் லாரிகள் காலவரை யற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.800 கோடி இழப்பு ஏற்படும் என்றார். இந்த வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம் மேளனமும் பங்கேற்கும் என அதன் தலைவர் எம்.ஆர்.குமார சாமி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT