விலை நிர்ணயக் குழு அமைத்தால், வீடு கட்டும்போது ஒரு சதுர அடி கட்டுவதற்கு ஆயிரத்து 500 ரூபாய் செலவாகிறது என்றால் ஆயிரத்து 300-ல் கட்ட முடியும். அதனால் ஒரு சதுர அடிக்கு ரூ.200 வரை மிச்சப்படுத்த முடியும்!
கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களின் விலையை நிர்ணயிக்க குழு அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இதனால் லட்சக்கணக்கில் நஷ்டப்படும் மக்களைக் காப்பாற்ற முடியும் என்று இத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கட்டிடத்தை வடிவமைத்து கட்டி முடிக்கும் வரை ஏராளமான மூலப்பொருட்கள் தேவைப் படுகின்றன. இவற்றுக்கு விலை நிர்ணயம் கிடையாது. அதே நேரத் தில் கட்டுமானத் துறையின் முக்கிய மான பொருட்களாக மணலும் சிமென்ட்டும் கருதப்படுகின்றன. ஒரு கன அடி மணலை அரசு ரூ.4-க்கு விற்கிறது. போக்குவரத்துச் செலவு உள்ளிட்டவற்றைச் சேர்த்தால் ஒரு கன அடி மணல் ரூ.20 முதல் அதிகபட்சம் ரூ.25 வரை விற்கலாம். ஆனால், யார்டில் இருப்பு வைத்து மணல் விற்கப்படுவதால் ஒரு கன அடி மணல் ரூ.45 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது.
சிமென்ட் உற்பத்திச் செலவு, போக்குவரத்து செலவு எல்லாம் சேர்த்தால் அதிகபட்சம் ரூ.280-க்கு விற்கலாம். ஆனால், ரூ.400 வரை விற்கப்படுகிறது. இதனால், ரூ.10 லட்சத்தில் ஒருவர் வீடு கட்டினால், மணல் மற்றும் சிமென்ட் விலை ஏற்றத்தால் சுமார் ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் கூடுதல் செலவாகிறது. அதாவது மொத்த செலவில் 10 சத வீதம் வீண் செலவு என்கிறார் சென்னை கட்டுமானப் பொறியாளர் கள் சங்கத் தலைவர் கோ.வெங்க டாசலம்.
இது தவிர பிளம்பிங், எலெக்ட் ரிக்கல் பொருட்கள், உள் அலங் காரப் பொருட்கள், வன் பொருட்கள் போன்ற எந்தப் பொருட்களுக்கும் உரிய விலை நிர்ணயம் கிடையாது. எனவே அவை அனைத்தும் இஷ் டத்துக்கு விலைவைத்து விற்கப்படு கின்றன. ஆனால், கட்டுமானத் துறையைப் பற்றி பேசும்போது மணல், சிமென்ட் தவிர வேறு எந்தப் பொருட்களைப் பற்றியும் யாரும் பேசுவதில்லை.
இதனால் ரியல் எஸ்டேட் தொழி லில் ஈடுபட்டுள்ள தனியாருக்கு மட்டுமல்ல அரசாங்கத்துக்கும் நஷ்டம்தான். அரசும் கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்ளும் போது பிளம்பிங், எலெக்ட்ரிக்கல் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்ப்பந் தம் உள்ளது. இப் பொருட்களுக்கு விலை நிர்ணயக் குழு அமைத்தால், வீடு கட்டும்போது ஒரு சதுர அடி கட்டுவதற்கு ஆயிரத்து 500 ரூபாய் செலவாகிறது என்றால் ஆயிரத்து 300-ல் கட்ட முடியும். அதனால் ஒரு சதுர அடிக்கு ரூ.200 வரை மிச்சப்படுத்த முடியும் என்கிறார் வெங்கடாசலம்.
சென்னை மகாகவி பாரதி நகர் சபரி என்டர்பிரைசஸ் உரிமையா ளர் ஜி.சரவணன் கூறும்போது, “பிளம்பிங் பொருட்களில் பிபிவிசி பைப், பிவிசி பைப், குழாய் ஆகியன மிக முக்கியமான பொருட்கள் ஆகும். இப் பொருட்களின் விலை கடந்த 5 ஆண்டுகளில் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஆண்டுக்கு 2 முறை இப்பொருட் களின் விலையை பெரிய நிறுவனங் கள் உயர்த்துகின்றன. கச்சாப் பொருட்களின் விலை உயராத நிலையில் மேற்கண்ட பொருட் களைத் தயாரிக்கும் பெரிய நிறுவ னங்களே விலையை உயர்த்துகின் றன. பிளம்பிங் பொருட்களின் விலை உயர்வும் கட்டுமானச் செலவு அதிகரிப்புக்கான காரணங்களில் ஒன்றாகும்” என்றார்.
எலெக்ட்ரிக்கல் பொருட்கள் தயாரிப்பாளர் மற்றும் விற்பனை யாளரான எழும்பூரைச் சேர்ந்த ஆர்.சின்னத்தம்பி கூறும்போது, “ஆண்டுக்கு ஒரு முறை எலெக்ட் ரிக்கல் பொருட்களின் விலை உயர்த்தப்படுகிறது. வீடு உள்ளிட்ட கட்டுமானங்களின்போது வயர், மாடுலர் சுவிட்ச், மின் பாதுகாப்பு சாதனங்கள் ஆகியன முக்கியப் பங்கு வகிக்கின்றன. வயரை எடுத் துக் கொண்டால், காப்பர் வயர், அலுமினியம் வயர் என இரு வகை கள் உள்ளன. காப்பர் வயரின் விலை தங்கத்தைப் போல அடிக் கடி மாறும். வரி உயர்வு, பெட் ரோல் விலை உயர்வால் போக்கு வரத்துச் செலவு அதிகரிப்பு, பொருட் கள் தயாரிப்புக்கான கச்சாப் பொருட்கள் விலை உயர்வு ஆகியன எலெக்ட்ரிக்கல் பொருட் கள் விலை உயர்வுக்கு காரணம்.
5 ஆண்டுகளுக்கு முன்பு விற் பனை வரி 12 சதவீதம்தான். இப் போது 14.50 சதவீதம். அண்மை யில் செஸ் 0.5 சதவீதம் அதி கரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு பொருள் தயாரிப்புச் செலவை அதிகரிக்கும். அதனால் பொருட் களின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விடுகிறது” என்றார்.