திமுக தலைவர் கருணாநிதியை ஆந்திர மாநில கல்வி அமைச்சர் கண்டா சீனிவாச ராவ் நேற்று சந்தித்துப் பேசினார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, ஆந்திர மாநிலத்தில் நடைபெறும் கும்பமேளாவான புஷ்கரம் கிருஷ்ணா திருவிழாவுக்கான அழைப்பிதழை சீனிவாச ராவ் வழங்கினார். லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு கருணா நிதிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா வில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களை விடுதலை செய்ய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று முன்தினம் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று தன்னை சந்தித்த ஆந்திர மாநில அமைச் சரிடம், 32 தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும், இதுகுறித்து சந்திரபாபு நாயுடுவிடம் தெரிவிக்குமாறும் கருணாநிதி கேட்டுக்கொண்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சந்திப்பின்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடனிருந்தார்.