கோவையில், கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜி.கே.நாகராஜ், கொங்குநாடு ஜனநாயகக் கட்சி (கேஜேகே) என்ற புதிய அரசியல் இயக்கத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார்.
கோவை, சின்னியம்பாளையத் தில் நடைபெற்ற விழாவில், கட்சியின் பெயர், கொடி, 24 கொள்கைகள் அறிமுகப்படுத்தப் பட்டன.
இது குறித்து கேஜேகே தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறியதாவது:
குடும்ப கலாசாரம், பண்பாடு ஆகியற்றை முன்னிலைப்படுத்தி, சமுதாய அரசியல் முன்னேற்றத்துக்காக, இக்கட்சி தொடங்கப்பட்டுள்ளது. கட்சி பொதுச்செயலாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். திண்ணைக் கூட்டங்கள், மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தல் தொடர்பாக, பாமக தலைமையிலான சமூக ஜனநாயகக் கூட்டணியுடன், ஓரிரு நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.