மணப்பாறையில் கடத்தப்பட்ட 2 வயது குழந்தையை மீட்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட் டுள்ளன. சிறுவனை கடத்திச் சென்ற காட்சிகள் சிசிடிவி கேமரா வில் பதிவாகியுள்ளன.
திருச்சி அரபிக்குளத் தெரு வைச் சேர்ந்தவர் பிரகாஷ் - முத்துலட்சுமி தம்பதியின் மகன் சாய்தர்ஷன்(2). குழந்தை சாய்தர் ஷன், மணப்பாறை அத்திக்குளத் தில் வசிக்கும் முத்துலட்சுமியின் தாய் வசந்தா வீட்டில் இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டருகே விளையாடிக் கொண்டி ருந்த குழந்தையை பைக்கில் வந்த ஒரு இளைஞர் கடத்திச் சென்றார்.
தகவலறிந்த போலீஸார் அப் பகுதி சாலைகளில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். கரூர் மாவட் டம் குளித்தலை பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் உட் பட 4 இடங்களில் உள்ள கேமராக் களில், பைக்கில் செல்லும் ஹெல்மெட் அணிந்த ஒரு இளை ஞர், குழந்தையை கடத்திச் சென்ற காட்சி பதிவாகி இருந்தது. பெட்ரோல் நிலையத்தில் பதிவான காட்சியில் அவர் ஹெல்மெட் அணியாமல் இருந்தது தெரிய வந்தது.
அதைக் கொண்டு கடத்தல் காரரின் முகம் மற்றும் உருவத்தை போலீஸார் கணினி மூலம் தெளி வாக காட்சிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
24 மணி நேரத்தில் பிடிப்போம்
இந்நிலையில், கடத்தப்பட்ட குழந்தையை மீட்க ஏடிஎஸ்பி நடராஜன், டிஎஸ்பி வனிதா, 4 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸாரைக் கொண்ட 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் திருப்பூர், சேலம், கரூர், கோவை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்ட எஸ்.பி. செந்தில்குமார், “அடுத்த 24 மணி நேரத்துக்குள் நிச்சயம் நல்ல தகவலை தெரிவிப்போம்” என்றார்.