கலைஞர் கருணாநிதி அறக் கட்டளை மூலம் மருத்துவம் மற்றும் கல்வி நிதி உதவியாக ரூ. 3 லட்சம் 12 பேருக்கு வழங்கப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதி தனது பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். அவர் தனது சொந்தப் பணம் ரூ.5 கோடியை வங்கியில் வைப்பு நிதியாக போட்டு அதில் கிடைக்கும் வட்டித் தொகையை கொண்டு மாதம் தோறும் ஏழை, எளிய நலிந் தோருக்கு உதவித் தொகையாக வழங்கி வருகிறார்.
இதன்படி, மருத்துவம் மற்றும் கல்வி நிதி உதவியாக தலா ரூ.25 ஆயிரம் வீதம் 12 பேருக்கு மொத்தம் ரூ.3 லட்சத்தை கருணாநிதி நேற்று வழங்கினார். இதுவரை இந்த அறக்கட்டளை மூலம் ரூ.4 கோடியே 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. திமுக நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.