தமிழகம்

சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் நியமன கலந்தாய்வு

செய்திப்பிரிவு

சிறுபான்மை மொழி இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிநியமனம் வழங்குவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு வருகிற 8-ம் தேதி நடைபெறுகிறது.

ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களில் தெரிவுசெய்யப்பட்ட தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது ஆகிய சிறுபான்மை மொழிவழி இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிநியமன ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு நவம்பர் 8-ம் தேதி ஆன்லைனில் நடைபெற உள்ளது.

பணிநாடுநர்கள் தேர்வு வாரி யத்தின் நுழைவுச்சீட்டில் (ஹால்டிக்கெட்) இருப்பிட முகவரி குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் வருகிற 8-ம் தேதி காலை 9 மணிக்குத் தங்கள் அசல் கல்விச்சான்றுகள் மற்றும் 2 நகல்களுடன் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும்.

SCROLL FOR NEXT