இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியில் இயற்கையை போற்றும் விதத்தில் கங்கை மற்றும் பூமி வந்தனம் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் 8-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியை பதஞ்சலி யோகா குரு பாபா ராம்தேவ், நேற்று முன்தினம் மாலை தொடங்கிவைத்தார். தொடக்க விழாவில் சீக்கிய மதகுரு கியானி இக்பால் சிங், பவுத்த அறிஞரும் பேராசிரியருமான கெஷே நவாங் சாம்தென், ஜைன அறிஞர் வீரேந்திர ஹெக்டே உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
கண்காட்சி முறைப்படி நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் முதல் நிகழ்ச்சியாக பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் பஜனை இடம் பெற்றது. இதைத் தொடர்ந்து பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரி யைகள் பங்கேற்ற நாடகம் அரங்கேற்றப்பட்டது.
கண்காட்சியின் முக்கிய நிகழ்வாக இயற்கையையும், சுற்றுச் சூழலையும் பாதுகாக்க வலியு றுத்தி கங்கை, பூமி வந்தனம் நடந் தது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று கங்கைக் கும், பூமிக்கும் வந்தனம் செய்து கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். மேலும், இயற்கையை பராமரிப்பது தொடர்பாக தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட பல்வேறு கட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான இறுதிச்சுற்று போட்டியும் நேற்று நடந்தது. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கண்காட்சியின் 2-வது நாளான இன்று பெற்றோர், ஆசிரியர் மற்றும் பெரியோர்களை வணங்குதல் என்ற கருத்தை வலியுறுத்தி நிகழ்ச் சிகள் நடத்தப்பட உள்ளன. கண் காட்சி வரும் 8-ம் தேதி வரை நடக் கிறது. ஒவ்வொரு நாளும் பெண் மையை போற்றுதல், எல்லா ஜீவராசி களையும் பேணுதல், நாட்டுப்பற்றை உணர்த்துதல், வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாத்தல் ஆகிய கருத்துகளை வலியுறுத்தி நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
ஈஷா மையம், பதஞ்சலி யோகா மையம், மாதா அமிர்தானந்தமயி மடம், பிரம்ம குமாரிகள் அமைப்பு, வாழும் கலை அமைப்பு உட்பட 300-க்கும் அதிகமான இந்து அமைப் புகள் தங்களது அரங்குகளை அமைத்திருந்தன. இந்த அரங்கு களைப் பார்வையிடுவதற்காக ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவிகள் நேற்று கண்காட்சிக்கு வந்திருந்தனர்.