தமிழகம்

கூடங்குளம் 2-வது அணு உலையில் வணிகரீதியில் மின் உற்பத்தி

செய்திப்பிரிவு

கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் உள்ள முதல் அணு உலையில் உற்பத்தி தொடர்ந்து நடைபெறுகிறது.

இதே அளவு திறனுள்ள 2-வது அணு உலையில், மின் உற்பத்திக்கான அணுக்கரு பிளவு தொடர்வினை, கடந்த ஆண்டு ஜூலை 10-ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 28-ம் தேதி, மின் உற்பத்தி தொடங்கப்பட்டு மத்திய மின் தொகுப்பில் இணைக் கப்பட்டது.

அணுசக்தி ஒழுங்காற்று வாரிய ஒப்புதலுடன் கடந்த ஜனவரி 20-ம் தேதி 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி எட்டப்பட்டது. பின்னர் ஆய்வுக்காக இந்த அணு உலை யின் செயல்பாடு படிப்படியாக நிறுத்தப்பட்டது.

ஆய்வுகளுக்குப் பின் மீண்டும் உற்பத்தி தொடங்கப்பட்டு, நேற்று 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய் யப்பட்டு, மத்திய மின் தொகுப் பில் இணைக்கப்பட்டது. வணிகரீதி யிலான மின் உற்பத்தி, நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியதாக அணு மின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்துக்கு 562 மெகாவாட்

2-வது அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், 1 யூனிட் ரூ.4.09-க்கு விற்பனை செய்யப்படும். மொத்த மின் உற்பத்தியான 1,000 மெகாவாட் மின்சாரத்தில், தமிழகத்துக்கு 562.50 மெகாவாட், தெலங்கானாவுக்கு 50, கர்நாடகாவுக்கு 221, கேரளாவுக்கு 133 மற்றும் புதுச்சேரிக்கு 33.50 மெகாவாட் என்று பகிர்ந்து அளிக்கப்படும்.

SCROLL FOR NEXT