தமிழகம்

கொடைக்கானல் மலைகிராமத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்: தோட்டப்பணிகளுக்குச் செல்ல முடியாமல் மக்கள் அச்சம்

செய்திப்பிரிவு

கொடைக்கானல் மலைப்பகுதி கோம்பை காமராஜர்புரம் அருகே தோட்டப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டுயானைகளால் அப்பகுதி மக்கள் பணிக்குச் செல்ல முடியாமல் அச்சமடைந்துள் ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதி பள்ளங்கி அருகே உள்ள கோம்பை கிராமம் காமராஜர்புரம் பகுதியில் கடந்த சில நாட்களாக யானைக்கூட்டம் முகாமிட்டுள்ளது. அவை, ஜோய் என்பவரது தோட்டத்தில் உள்ள தொட்டியில் நீர்அருந்த அடிக்கடி வந்துசெல்கின்றன. அப்போது தோட்டங்களில் உள்ள பலா மரங்கள், வாழை மரங்களை சேதப்படுத்துகின்றன. இந்த யானைக் கூட்டத்தில் குட்டி யானை ஒன்று உள்ளது. குட்டி யானையை பாதுகாக்கும் வகையில், அப்பகுதி வழியாக யாரையும் வரவிடாமல் மற்ற யானைகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

இதனால் கோம்பை பகுதி மக்கள் தங்கள் தோட்டங்களுக்கு செல்லமுடியாமல் அச்சத்தில் உள்ளனர். தோட்டப்பயிர்களை சேதப்படுத்துவதுடன், தங்களை அச்சுறுத்தி வரும் யானைக் கூட்டத்தை அப்பகுதியில் இருந்து விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT