சென்னை வடழபனி ஆகாஷ் மருத்துவமனையில் 3 ஆயிரம் குழந்தைகள் பங்கேற்ற சங்கமம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. குழந்தையில்லா தம்பதியர்களுக்கு இலவச ஆலோசனை நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
இந்தியாவில் முதல்முறையாக குழந்தையின்மைக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை வடபழனி யில் ‘ஆகாஷ் மருத்துவமனை’ தொடங்கப்பட்டது. இந்த மருத்துவ மனை கடந்த 23 ஆண்டுகளாக குழந்தையின்மைக்கான காரணங் களும், அதற்கான சிகிச்சை முறைகளும் என்ற விழிப்புணர்வு கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்நிலையில் 24-வது விழிப்புணர்வு கண்காட்சி ஆகாஷ் மருத்துவமனை யில் கடந்த 22-ம் தேதி தொடங்கியது.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட உளவியல் நிபுணர் டாக்டர் ஜி.ராஜமோகன் கண்காட்சியை தொடங்கிவைத்தார். இரண்டாம் நாளான நேற்று கல்லூரி மாணவ, மாணவிகள் வந்து கண்காட்சியை பார்வையிட்டனர்.
இந்நிலையில் சர்வதேச ஐவிஎப் (சோதனைக் குழாய் குழந்தை) தினமான நேற்று இந்த மருத்துவ மனையில் சோதனைக் குழாய் மூலம் பிறந்த குழந்தைகள் பங்கேற்கும் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேற்று மாநிலங்களில் இருந்து சோதனைக் குழாய் மூலம் பிறந்த கைக்குழந்தை முதல் 15 வயது வரையிலான சுமார் 3 ஆயிரம் குழந்தைகள் பெற்றோருடன் பங்கேற்றனர். அதிக அளவில் இரட்டைக் குழந்தைகள் கலந்துகொண்டனர். மருத்துவமனை இயக்குநர்கள் டி.காமராஜ், ஜெயராணி காமராஜ் குழந்தைகளுக்கு இனிப்புகளையும், பரிசுப் பொருட்களையும் வழங்கினர். அதன்பின் குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
குழந்தைகளின் பெற்றோர் கூறும்போது, “பல ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டோம். ஆகாஷ் மருத்துவமனைக்கு வந்த பிறகு எங்களுக்கு நம்பிக்கை வந்தது. நாங்கள் குழந்தையுடன் சந்தோஷமாக இருக்கிறோம். தொடர் சிகிச்சையும், பொறுமையும் இருந்தால் குழந்தை பிறக்க அதிகம் வாய்ப்பு உள்ளது” என்றனர்.
இந்நிலையில், கடைசி நாளான இன்று குழந்தையில்லா தம்பதி யருக்கு மருத்துவமனை இயக்கு நர்கள் டி.காமராஜ், ஜெயராணி காமராஜ் ஆகியோர் ஆலோசனை களை வழங்க உள்ளனர். குழந்தை யில்லா தம்பதியர்கள் ஆலோசனை நிகழ்ச்சியில் பங்கேற்று பயன் பெறலாம்.
ஆகாஷ் மருத்துவமனையில் இதுவரை 15 ஆயிரத்துக்கும் அதிக மான குழந்தைகள் பிறந்துள்ளன. சோதனைக் குழாய் மூலமாக மட்டும் 5 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளன. 54 வயதான பெண் இரட்டைக் குழந்தைகளையும், சிலர் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளனர்.