இமானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், அமைப்பினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடம் பரமக்குடி சந்தைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது. அங்கு அவரது 59-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. தமிழ்நாடு தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம் சார்பில் காலை 7 மணி அளவில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதையடுத்து, அஞ்சலி செலுத்திய இமானுவேல் சேகரனின் சொந்த ஊரான செல் லூர் கிராம மக்கள், “ஆண்டு தோறும் செல்லூர் கிராமத்தினர் தான் முதலில் மரியாதை செலுத்து வோம். தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத்தினர் முதலில் அஞ்சலி செலுத்தியது ஏன்?” என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத் தினர் பகிரங்கமாக ஒலிபெருக் கியில் மன்னிப்பு கேட்டனர். அதையடுத்து செல்லூர் கிராம மக்கள் அங்கிருந்து சென்றனர்.
அதிமுக சார்பில் அமைச்சர்கள் எம்.மணிகண்டன், வி.எம்.ராஜ லெட்சுமி, அன்வர் ராஜா எம்பி, முத்தையா எம்எல்ஏ உள்ளிட் டோர் அஞ்சலி செலுத்தினர். இமானுவேல் சேகரனின் மகள் பிரபா ராணி தனது குடும்பத்தின ருடன் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “எனது தந்தை தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர். அவரது நினைவு தினத்தை அரசு சார்பில் அனுசரிக்க வேண்டும். அடுத்த ஆண்டு அவரது நினைவு தின நிகழ்ச்சியை இமானுவேல் சேகரன் அறக்கட்டளை சார்பில் நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.
திமுக சார்பில் மாவட்டச் செய லாளர் சுப.த.திவாகரன், முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, தமிழரசி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் சார்பில் முதுகுளத்தூர் எம்எல்ஏ மலே சியா பாண்டியன் தலைமையில் அஞ்சலி செலுத்தினர். மதிமுக சார்பில் ஆட்சிமன்றக் குழு செய லாளர் கணேசமூர்த்தி தலைமை யில் அஞ்சலி செலுத்தினர். தமாகா சார்பில் முன்னாள் எம்எல்ஏ கே.வி.ஆர்.ராம்பிரபு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பாஜக சார்பில் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தலைமையிலும், பாமக சார்பில் மாவட்டச் செய லாளர் தங்கராஜ் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பரமக்குடி தேவேந்திரர் பணியாளர் நலச் சங்கத்தினர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.