தமிழகம்

சிறு, குறு தொழில்களுக்கு வழங்கிய வாராக் கடன்களை வசூலிக்க குழு: மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தகவல்

செய்திப்பிரிவு

இந்தியாவில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களில் வாராக் கடனாக உள்ள ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடியை வசூல் செய்வது தொடர்பாக குழுக்கள் அமைத்து, ஆய்வு செய்ய இருப்பதாக மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் கிரிராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

கோவையில் அவர் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பின்னர் பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அடைந்து வருகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கொடுக்கப்பட்ட ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடி வாராக்கடனாக உள்ளது. அவற்றை மீட்க குழு அமைக் கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப் படும். அவ்வாறு அமைக்கப்படும் குழுக்கள் மூலம் வாராக் கடன் களுக்கான காரணம் கண்டறியப் படுவதுடன் தொழில் துறையை மேம்படுத்த மேலும் கடன்கள் வழங்கவும் நடவடிக்கை மேற் கொள்ளபடும்.

சிறு தொழில் மேம்பாட்டுக்காக இதுவரை முத்ரா வங்கியின் மூலம் 1 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் கடன் வழங்கப்பட்டுள்ளது. பொதுத் துறை நிறுவனங்களுக்கு தேவை யான உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்களை நடுத்தர நிறுவனங் கள் மூலம் கொள்முதல் செய்ய வும், கொள்முதல் செய்யப்படும் பொருட்களுக்கான தொகையை தாமதமின்றி தொழில்முனை வோருக்கு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 35 வயதை கடந்தவர் களுக்கு வங்கிகள்மூலம் கடன் வழங்கவும், மின்ஆளுமைத் திட்டம் மூலம் தொழில்துறையில் வெளிப்படையான நடவடிக்கை களை மேற்கொள்ளவும் நடவடிக் கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கூறினார்.

SCROLL FOR NEXT