தமிழகம்

காஞ்சி, திருவள்ளூரில் 2-ம் தவணையாக 5.68 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சுமார் 5.68 லட்சம் குழந்தைகளுக்கு 2-வது தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

5 வயதுக்கு உட்பட்ட குழந் தைகளுக்கு முதற்கட்டமாக கடந்த ஏப்.2-ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. 2-ம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நேற்று நடைபெற்றன.

இதில், காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள 3 லட்சத்து 29 ஆயிரத்து 695 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்காக, 9 அரசு மருத்துவமனைகள், 57 அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள், 151 துணை சுகாதார நிலையங்கள், 1,342 சத்துணவு மையங்கள், 75 பேருந்து நிலையங்கள், 3 சுங்கச் சாவடிகள் மற்றும் 25 நடமாடும் மருத்துவக் குழுக்கள் உட்பட 1,903 மையங் கள் ஏற்படுத்தப்பட்டன.

இதுதவிர, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் சிறப்பு முகாம் கள் செயல்பட்டன. சொட்டு மருந்து வழங்கும் பணியில் 754 சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் 3,653 சத்துணவு பணியாளர்கள் உட்பட மொத்தம் 7,650 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் திருவள்ளூர் நகராட்சி அலு வலகத்தில் நடைபெற்ற நிகழ்ச் சியில், சுகாதார செயலர் ராதா கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி ஆகியோர் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தனர்.

மாவட்ட மருத்துவப் பணிகள் மற்றும் குடும்ப நலத் துறைக் கான இணை இயக்குநர் டாக்டர் மோகனன், சுகாதாரப் பணிகளுக் கான துணை இயக்குநர் டாக்டர் பிரபாகரன், நகராட்சி ஆணை யர் செந்தில்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2,39,189 குழந் தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிப்பதற்காக 1,343 மையங்களில் இந்த முகாம் நடந்தது. செங்கல் சூளைகள், கட்டு மானப் பணி நடைபெறும் இடங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளிலும் முகாம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT