கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் நீராதாரமாக விளங்குவது பவானி நதி. அதன் கிளை நதி சிறுவாணி. இவ்விரு நதிகள் மூலம் கோவை, திருப்பூர், கரூர் மாவட்ட குடி நீர்த் தேவை உட்பட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. தவிர 3 மாவட்டங்களின் விவசாயப் பாசனத்துக்கும் பயனாகிறது.
இந்த சூழ்நிலையில் சிறுவாணியில் சித்தூர் பகுதியில் அணை கட்ட முடிவு செய்திருக்கிறது கேரள அரசு. இதைக் கண்டித்து, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கோவையில் இன்று கொடீசியா மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.