தமிழக பட்ஜெட் மணமில்லாத காகிதப் பூ, தாகத்துக்கு உதவாத கானல் நீர் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கை:
கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் டில் ரூ. 36 ஆயிரத்து 740 கோடியே 11 லட்சம் அளவுக்கு நிதிப் பற்றாக் குறை இருக்கும் என மதிப்பிடப்பட் டது. ஆனால், தற்போது நிதிப் பற் றாக்குறை ரூ. 40 ஆயிரத்து 533 கோடியே 84 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் மொத்த உற்பத் தி மதிப்பில் 2.96 சதவீதமாகும்.
மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப்பற்றாக்குறை 3 சத வீதத்துக்குள் இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. 2.96 சதவீதம் என்பது வரையறுக்கப் பட்ட அளவை விட 0.4 சதவீதமே குறைவாகும். 2017- 18-ம் ஆண்டில் இது 3.34 சதவீதமாக இருக்கும் என இந்த பட்ஜெட்டில் குறிப்பிட்டுள் ளார்கள். இதிலிருந்து தமிழகத்தின் நிதி நிலைமை எந்த அளவுக்கு இருக் கிறது என்பதை புரிந்து கொள்ள லாம். நிதிப்பற்றாக்குறையை வரையறுக்கப்பட்ட 3 சதவீதத்துக் குள் கட்டுப்படுத்த மாநில அரசு என்ன செய்யப் போகிறது?
31-3-2017-ல் தமிழக அரசின் கடன் ரூ. 2 லட்சத்து 47 ஆயிரத்து 31 கோடியாக இருக்கும் என இடைக்கால பட்ஜெட்டில் கூறப்பட் டிருந்தது. ஆனால், தற்போது தமிழகத்தின் கடன் ரூ. 2 லட்சத்து 52 ஆயிரத்து 431 கோடியாக இருக் கும் என சொல்லியிருக்கிறார்கள். ஒருசில மாதங்களில் கடன் அளவு ரூ. 5 ஆயிரத்து 400 கோடி உயர்ந்துள்ளது.
மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு ரூ. 23 ஆயிரத்து 688 கோடியே 11 லட்சமாக இருக் கும் என இடைக்கால பட்ஜெட் டில் கூறப்பட்டிருந்தது. ஆனால், திருத்திய பட்ஜெட்டில் மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கை ரூ. 670 கோடி குறைத்து ரூ. 23 ஆயிரத்து 18 கோடியே 12 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு நிதியமைச்சர் தனது பதிலுரையில் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கிறேன்.
2011-12 இடைக்கால பட்ஜெட் டை திமுக அரசு தாக்கல் செய் தபோது ரூ. 17 ஆயிரத்து 607 கோடியே 71 லட்சம் நிதிப் பற்றாக் குறை இருந்தது. இதனை சுட்டிக் காட்டிய ஜெயலலிதா, இது தான் கருணாநிதியின் 5 ஆண்டு கால சாதனையா என அறிக்கை விடுத் தார். ஆனால், தற்போது நிதிப் பற்றாக்குறை ரூ. 40 ஆயிரத்து 533 கோடியே 84 லட்சம். இதுதான் ஜெயலலிதாவின் 5 ஆண்டு கால சாதனையா என நான் திருப்பி கேட்க விரும்பவில்லை.
முக்கியமான துறைகளுக்கு இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக் கப்பட்ட அளவுக்கு கூட திருத் திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்க முடியவில்லை. நிதி நிலைமை அவ்வாறு உள்ளது. மொத்தத்தில் தமிழக அரசின் பட்ஜெட் ஏழை களின் கண்ணீரை துடைப்பதாக இல்லை. இந்த பட்ஜெட் மணமில் லாத வெறும் காகிதப் பூ. தாகத்துக்கு உதவாத கானல் நீர். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.