தமிழகம்

பொன்முடியின் ‘டங்க் ஸ்லிப்’ பேச்சால் பேரவையில் சிரிப்பலை

செய்திப்பிரிவு

‘முதல்வரைப் போல எனக்கும் டங்க் ஸ்லிப்’ ஆகிவிட்டது என பொன்முடி கூறிய பதிலால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நேற்று நடந்த விவாதம் வருமாறு:

பொன்முடி (திமுக):

ஆளுநர் உரையில் லோக் ஆயுக்தா பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. லோக் பால் சட்டத்திருத்தத்துக்கு காத்திருக்காமல் லோக்ஆயுக்தாவை தமிழகத்தில் கொண்டுவர வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா:

ஊழல் ஒழிப்பு விவகாரத்தில் திமுக அதீத அக்கறை கொண்டுள்ளது. திமுக ஆட்சியில் இருந்தபோது லோக் ஆயுக்தாவை கொண்டு வந்திருக்கலாமே?

பொன்முடி:

கடந்த 1973-ல் திமுக ஆட்சியின்போது, லோக் ஆயுக்தாவுக்கு இணையான ஊழல் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதை 1976-ல் அதிமுக அரசு ரத்து செய்துவிட்டது.

முதல்வர் ஜெயலலிதா:

இப்போது பேசுவது லோக் ஆயுக்தாவை பற்றிதான். திமுக எத்தனை முறை ஆட்சியில் இருந்தது. உங்கள் ஆட்சியில் ஏன் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரவில்லை?

பொன்முடி:

நீங்கள்தான் கூறியுள்ளீர்கள். நாங்கள் சொல்லவில்லை

(அப்போது, முதல்வர் ஜெயலலிதாவிடம் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சில தகவல்களை கூறினார்.)

முதல்வர் ஜெயலலிதா:

1973-ல் திமுக கொண்டுவந்த சட்டத்தை 1976-ல் அதிமுக அரசு ரத்து செய்துவிட்டதாக பொன்முடி கூறியுள்ளார். ஆனால், 1977-ல்தான் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சி தமிழகத்தில் அமைந்தது.

பொன்முடி:

ஆம், 1977-ல்தான் சட்டம் ரத்து செய்யப்பட்டது. ஏற்கெனவே முதல்வர் சட்டப்பேரவையில் ஒருமுறை தனக்கு ‘டங்க் ஸ்லிப்’ ஆனதாக தெரிவித்திருந்தார். அதேபோல எனக்கு இப்போது ‘டங்க் ஸ்லிப்’ ஆகிவிட்டது.

இவ்வாறு பொன்முடி கூறியதும் சட்டப்பேரவையில் பலத்த சிரிப்பலை எழுந்தது.

SCROLL FOR NEXT