மறைந்த கர்னாடக இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசை ஆளுமை பற்றி சனிக்கிழமைதோறும் இரவு 9.30 மணிக்கு 'குறையொன்றுமில்லை' என்ற நிகழ்ச்சியை பொதிகை தொலைக்காட்சி வழங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியை 'தி இந்து' நாளிதழ் இணைந்து வழங்கி வருகிறது.
43-வது வார 'குறையொன்று மில்லை' நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதில் எம்.எஸ்.சுப்புலட்சுமி மேற்கொண்ட ரிஷிகேஷ் யாத்திரை, சுவாமி சிவானந்த சரஸ்வதி முன்னிலையில் இசைத்த தேமதுர ஞானம் பற்றிய குறிப்புகள் ஆகியவை இடம்பெறுகின்றன.
சென்னை தூர்தர்ஷன் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த 'குறையொன்றுமில்லை' தொடர் உருவாகக் காரணமாக இருந்தவரும், தொடரின் வெற் றிக்கு உழைத்தவர்களில் ஒருவருமான சென்னை தூர்தர்ஷன் நிகழ்ச்சிப் பிரிவு இயக்குநர் சி.என்.ராமச்சந்திரா கடந்த வாரம் திடீர் உடல்நலக் குறைவால் கால மானார். அவருக்கு அஞ்சலி செலுத் தும் வகையில் இந்த வார நிகழ்ச்சி காணிக்கை செய்யப்படுகிறது.
பொதிகை தொலைக்காட்சியில் இன்று இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, வரும் செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது.