தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியி லிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் ஆகியோருக்கு அவர் அனுப்பி யுள்ளதாக தெரிகிறது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதற்கு இளங்கோவனே காரணம் என்றும், வேட்பாளர்கள் தேர் வில் அவர் கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் மீது புகார்கள் குவிந்தன.
அதன் பிறகு டெல்லி சென்று ராகுல்காந்தியிடம் தோல்விக்கான காரணங்களை எடுத்துரைத்தார். சோனியாவை சந்திக்க 3 நாட்கள் காத்திருந்தும் அவரை சந்திக்க இயலவில்லை.
பின்னர் சென்னை திரும்பிய இளங்கோவன் ராஜினாமா முடிவை எடுத்துள்ளதாக தெரி கிறது. வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி திரும்பியதும், ராஜினாமா கடிதம் குறித்து முடிவெடுப்பார் எனத் தெரிகிறது.