தமிழகம்

ரேஷன் ஊழியர்கள் 259 பேர் இடைநீக்கம்: பருப்பு, பாமாயில் குறைவின்றி விநியோகம் - கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜு தகவல்

செய்திப்பிரிவு

நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் குறைவின்றி வழங்கப்படுகின்றன. முறைகேடு களில் ஈடுபட்ட 259 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கூட்டுறவு நியாயவிலைக் கடைகள், டியூசிஎஸ் கடைகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல் லூர் கே.ராஜு நேற்று ஆய்வு செய்தார். பிறகு, செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் 32,695 நியாயவிலைக் கடைகள் மூலம் இலவச அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி வழங்கப்படுகின்றன. சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம்பருப்பு, பாமாயில் ஆகிய பொருட்கள் எவ்வித குறையுமின்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப் படுகிறது.

பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகள் கணினிமயம் ஆக்கப்பட்டுள்ளதால், தவறுகள் தடுக்கப்பட்டுள்ளன. மேலும், நியாயவிலைக் கடைகளில் மின் னணு விற்பனைக் கருவி மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவது குறித்து பொது மக்களுக்கு குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

நியாயவிலைக் கடைகளில் பொதுவிநியோகம் குறித்து பொதுமக்களுக்கு சந்தேகம், புகார்கள் இருந்தால் 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய இலவச தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். 99809 04040 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலமாகவும் தெரி விக்கலாம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

நியாயவிலைக் கடைகளில் முறைகேடுகளில் ஈடுபட்ட 259 பணியாளர்கள் இடைநீக் கம் செய்யப்பட்டு அவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நியாயவிலைக் கடைகளில் மின்னணு குடும்ப அட்டை தொடர் பான விவரங்கள் ஒட்டப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். டெல்லியில் இருந்து வந்துள்ள நாடாளுமன்ற நிலைக்குழுவினர் மதுரையில் பொது விநியோகத் திட்ட செயல் பாடுகள் குறித்து ஆய்வு மேற் கொண்டனர். தமிழகத்தில்தான் இத்திட்டம் சிறப்பாக உள்ளதாக அவர்கள் பாராட்டியுள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் கூறினார். ஆய்வில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.ஞானசேகரன், கூடுதல் பதிவாளர்கள் த.ஆனந்த், பா.பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT