தமிழகம்

தேசிய ஆவணக் காப்பகத்தின் 125-வது ஆண்டு விழா: 10 ரூபாய் நாணயங்கள் வெளியீடு

செய்திப்பிரிவு

இந்தியாவின் தேசிய ஆவணக் காப்பகத்தின் 125-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக 10 ரூபாய் நாணயங்களை புழக்கத்தில் விடுகிறது.

இந்த புதிய நாணயத்தின் மத்தியில் அசோகா தூணின் சிங்க முகமும் அதற்குக் கீழ் ‘சத்யமேவ ஜெயதே’ என்ற வாசகம் இந்தி யிலும் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் இடப்பக்கம் ‘பாரத்’ என்று தேவநாகரியிலும், வலது பக்கம் ‘இந்தியா’ என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும்.

நாணயத்தின் மறுபக்கம் தேசிய ஆவணக் காப்பகக் கட்டிடத்தின் உருவப்படம் மத்தியில் பொறிக்கப் பட்டிருக்கும். உருவப்படத்தின் கீழே ‘125’ என்று வருடமும் பொறிக்கப்பட்டிருக்கும். 125-வது வருடக் கொண்டாட்டங்களின் ‘இலச்சினை’ தேசிய ஆவணக் காப்பகக் கட்டிட உருவப்படத் துக்கு மேலே இருக்கும். மேலும், ‘1891’ மற்றும் ‘2016’ என்று நாண யத்தின் மேற்புறமும், கீழ்ப்புற மும் எழுதப்பட்டிருக்கும். உருவப் படத்தின் இடது மற்றும் வலதுபுறம் முறையே மேல்பக்கத்தில் ‘1891’ மற்றும் ‘2016’ என்று ஆண்டு சர்வதேச எண்களில் பொறிக்கப் பட்டிருக்கும்.

நாணயத்தின் வட்டம் 27 மி.மீ. அமைந்திருக்கும். 2011-ம் வருட இந்திய நாணயச் சட்டத்தின்படி, இந்த நாணயங்கள் செல்லத் தக்கவை. ஏற்கெனவே புழக்கத் தில் இருக்கும் இந்த மதிப் பிலக்க நாணயங்களும் செல்லத் தக்கவை என பத்திரிகை தகவல் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT