சத்தீஸ்கர் மாநிலத்தில் 136 போலீஸ்காரர்களை கொலை செய்த நக்ஸல் தலைவர் ஹேமந்த் மண்டாவி என்ற பிஜ்ஜா கைது செய்யப்பட்டார்.
2010 ஏப்ரலில் சத்தீஸ்கரின் தந்தேவாடா பகுதியில் சிஆர்பிஎப் படையினரை சுற்றிவளைத்து நக்ஸல் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 76 சிஆர்பிஎப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலை ஹேமந்த் மண்டாவிதான் தலைமையேற்று நடத்தினார். இதுபோல் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சண்டைகளில் மொத்தம் 136 போலீஸாரை கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.