தமிழகம்

முதலீட்டாளர்களுக்கு தமிழக அரசு அழைப்பு: அடுத்த ஆண்டு மே 23, 24-ல் சென்னையில் சர்வதேச மாநாடு

செய்திப்பிரிவு

அடுத்த ஆண்டு மே 23, 24-ம் தேதி களில் சென்னையில் நடக்கவுள்ள மாநாட்டில் பங்கேற்று, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

வெளிநாட்டு முதலீட்டாளர் களை ஈர்ப்பதில் அங்கீகாரம் பெற்ற பாதுகாப்பான மாநில மாக தமிழகம் திகழ்கிறது. ‘தமிழகம் தொலைநோக்கு 2023’ திட்டம், இந்தியாவில் 22 சதவீத பொருளாதார வளர்ச்சி கொண்ட மாநிலமாக தமிழகத்தை மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக 217 வகையான திட்டங்களை தேர்ந்தெடுத்துள்ளது. தமிழக தொழிற்துறை 2014 கொள்கையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த பிப்ரவரி 21-ல் வெளியிட்டார். ஆட்டோமொபைல், ஆட்டோ உதிரிபாகங்கள் மற்றும் உயிரி தொழில்நுட்பத்துக்கான கொள்கையையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதன்படி, சர்வதேச முதலீட் டாளர்களை தமிழகத்துக்கு ஈர்க்கும் வகையில், அடுத்த ஆண்டு மே 23 மற்றும் 24-ம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் சந்திப்பு மாநாட்டுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மின்னணு, மின்னணு ஹார்டு வேர், துணிநூல், விவசாயம், உணவு பதப்படுத்துதல், தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில் நுட்பம், மருந்துப் பொருட்கள், ஆட்டோமொபைல்ஸ், வாகன உதிரி பாகங்கள், ரசாயனம், பெட்ரோ கெமிக்கல், பொறியியல், கனரக தொழில்துறை, சாலைகள், சிறு துறைமுகம், மின்சாரம், தொழிற் பூங்காக்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகிய துறைகளில் சந்திப்புகள் நடக்கும்.

ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் முதலீட்டாளர்கள் பங்கேற்க உள்ளனர். ஜப்பானின் ஜெட்ரோ, அமெரிக்கா இந்திய வர்த்தக கவுன்சில், கொரியா வர்த்தக மேம்பாட்டு முகமை உள்ளிட்டவையும் பங்கேற்கும். பல்வேறு தொழில் வர்த்தக கூட்டமைப்புகளுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது.

மாநாடுக்கு முன்பு முதலீட் டாளர்களுடன் பல்வேறு தொடர் ஆலோசனை நிகழ்ச்சிகள் இப்போ திருந்தே நடக்கவுள்ளன. பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் என்ற நிறுவனம் இந்த மாநாட்டை நடத்த தேர்வாகியுள்ளது. தமிழக தொழிற் துறை வழிகாட்டி மற்றும் ஏற்று மதி மேம்பாட்டு அமைப்பு, இம்மாநாட்டுக்கான தலைமை யகமாக செயல்படும்.

சர்வதேச முதலீட்டாளர்கள் சந்திப்பு மாநாடான ‘ஜிம் (GIM) 2015’, தமிழகத்தின் தொலை நோக்கு திட்டமான அமைதி, வளம், வளர்ச்சியை உறுதிப்படுத் துவதாகவும், நாட்டில் அனைத்து வளர்ச்சியிலும் முதன்மை மாநில மாகவும் மாற்றும்.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT