தருமபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டுவரும் 4 குழந்தைகளும் நலமாக உள்ளதாக மருத்துவமனை டீன் நாராயண பாபு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "பிறவி சுவாசக் கோளாறு காரணமாக நான்கு குழந்தைகளுக்கும் சுவாசக் கருவி உதவி வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் நலமாக உள்ளன. அடுத்த 24 மணி நேரம் முதல் 32 மணி நேரத்துக்குள் குழந்தைகள் சகஜ நிலைக்கு திரும்புவார்கள். குழந்தைநல நிபுணர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்" என்றார்.
கடந்த 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தருமபுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 பச்சிளங் குழந்தைகள் பலியாகின.