தமிழகம்

ஆந்திரத்தில் புலிகள் சரணாலயம் விரிவாக்கம்

செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலத்தில் புலிகளின் சரணாலய பரப்பளவு அதிகரிக்கப்பட உள்ளது. இதற்காக திருப்பதி வனப்பகுதியில் சரணாலயப் பகுதிகளை தேர்வு செய்யும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் உள்ள புலிகளை பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. நாடு முழுவதும் புலிகளுக்காக 27 சரணாலயங்கள் உள்ளன.

இதில், புலிகளுக்காக 153 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்து புலிகளின் உயிரிழப்பை தடுக்கவும், இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது.

புலித்தோல் மற்றும் அதன் நகங்களுக்காக புலிகள் வேட்டை யாடப்படுகின்றன. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 20ம் நூற்றாண்டில் ஒரு லட்சம் புலிகள் இருந்துள்ளன. தற்போது, 3200 புலிகள் மட்டும் இருப்பது தெரியவந்துள்ளது

இது தொடர்பாக ஆந்திர மாநிலத்தில் தற்போது நாகார்ஜூன சாகர்-ஸ்ரீசைலம் வனப்பகுதியில் இருந்து நலகொண்டா, மகபூப்நகர், பிரகாசம், குண்டூர், கடப்பா, கர்நூல்வரை சுமார் 4 லட்சத்து 83 ஆயிரத்து 600 ஹெக்டர் பரப்பளவில் புலிகள் சரணாலயம் உள்ளது.

இந்த வனப்பகுதியில் 130 கி.மீ வரை கிருஷ்ணா நதி அமைந்துள் ளதால் இது புலி களுக்கு மிகவும் உபயோகமாக உள்ளது.

இதனை தற்போது 5 லட்சம் பரப்பளவுக்கு விஸ்தரிக்க மத்திய அரசு முடிவு செய்து அனுமதி யளித்துள்ளது.

இதன்மூலம் திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவரை கூடுதலாக 52 ஆயிரத்து 597 ஹெக்டர் பரப்பளவுக்கு வனப்பகுதி விஸ்தரிக்கப்படும்.இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

ஆந்திர மாநிலத்தில் மட்டும் 5 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் புலிகள் சரணாலயம் அமைய இருப்பதால் சித்தூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் சரணால யத்துக்கான இடங்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT