தமிழகம்

அவதூறு வழக்குகளை அரசு திரும்ப பெற வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

அவதூறு வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியா ளர்களிடம் அவர் கூறியதாவது: செப். 2-ம் தேதி பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இப்போராட் டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவை அளிக் கிறது.

நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக் கிறது. நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி கர்நாடக மாநிலம் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கா ததால் டெல்டா மாவட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளாக குறுவை பயிர் செய்யப்படவில்லை. இந்த ஆண்டு குறுவை மட்டுமல்லாமல் சம்பா பயிருக்கும் தண்ணீர் இல்லை. மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு சுமுகத் தீர்வை ஏற்படுத்த வேண்டும்.

காவிரிப் பிரச்சினைக்காக தமிழக முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து தண்ணீரை பெற வேண்டும். வரும் செப். 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் உள்ளிட்ட சிறைக்கைதிகளை விடுவிக்க வேண்டும்.

தமிழக சட்டப்பேரவையின் செயல்பாடு பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக உள்ளது. பிரதான எதிர்க்கட்சி யான திமுகவின் 79 எம்எல்ஏக் கள் இடைநீக்கத்தை சட்டப் பேரவைத் தலைவர் திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT