தமிழகம்

எரிவாயு திட்டத்தை தடை செய்வதுதான் தீர்வு: திருநாவுக்கரசர் கருத்து

செய்திப்பிரிவு

நெடுவாசலில் எரிவாயு திட்டத்தில் அரசியல் செய்யாமல் அந்த திட்டத்தை தடை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடு வாசலில் எரிவாயு எடுக்கும் திட் டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை நேற்று சந்தித்து பேசியதோடு, எரிவாயு எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறையும் திருநாவுக்கரசர் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காங்கிரஸ் ஆட்சியின்போது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் எரிபொருள் இருப்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டாலும், தற்போதுதான் நெடுவாசல் உட்பட பல இடங்களில் எரிபொருள் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் பேராபத்தை புரிந்துகொண்ட இப்பகுதி மக்கள், தொடர்ந்து போராட்டங்களில் ஈடு பட்டு வருகின்றனர். இப்பகுதி மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு விளைநிலங்களையும், விவசாயத்தையும் பாதிக்கும் வகை யிலான இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

அரிசியியல்பூர்வமாக

மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், இப்பிரச்சினையில் அறிவியல்பூர்வமாக சிந்திக்க வேண்டும் என்று கூறி வருகிறார். என்னைப் பொறுத்தவரை, இப்பிரச்சினையில் அறிவியல் பூர்வமாகவோ, அரசியல்பூர்வ மாகவோ இல்லாமல், அனைவருக் கும் அரிசி முக்கியம் என்பதால், இதை அரிசியியல்பூர்வமாக அணுக வேண்டும் என்றார்.

கிராம சபையில் தீர்மானம்

நெடுவாசலில் போராட்டத்தை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி பேசியபோது, “கிராமசபைக் கூட் டத்தில் இயற்றப்படும் தீர்மானங் களை நீதிமன்றத்தால்கூட நிரா கரிக்க முடியாது என்பதால், ஊராட்சி களில் சிறப்பு கிராம சபையைக் கூட்டி அதில் எரிவாயுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

நிலத்தடி நீர் எத்தனை அடி ஆழத் தில் இருக்கிறது என்று விவசாயி களுக்கு தெரியும் அளவுக்குக்கூட விஞ்ஞானிகளுக்கு தெரிவதில்லை. நிலம், நீர், காற்று என சூழலுக்கு கேடு விளையும் இந்த திட்டத்தை அடியோடு அப்புறப்படுத்த வேண் டும்” என்றார்.

          
SCROLL FOR NEXT