உடல்நலத்தைக்கூட பார்க்காமல் மக்களுக்காக உழைத்து திட்டங் களைத் தீட்டி நிறைவேற்றிய மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மக்கள் மனதில் நீக்கமற நிறைந் துள்ளார் என்று சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் புகழாரம் சூட்டினார்.
சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரை மீதான விவாதத்தை தொடங்கிவைத்து செங்கோட்டையன் பேசியதாவது:
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அமைதியாகப் போராடிய மாண வர்கள், இளைஞர்கள், பொது மக்களுக்கு அதிமுக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்போராட்டத்தின் மூலம் உலகையே மாணவர்கள் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளனர்.
ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமானால், எதிர்க்கட்சிகள் சரியாக இருக்க வேண்டும். அவர் கள் எதிரிக்கட்சியாக இருக்கக் கூடாது. ஜனநாயகம் மலர அவர் கள் உதவவேண்டும். கடந்த 2011 தேர்தலின்போது, 54 வாக் குறுதிகள் அளிக்கப்பட்டன. 2016 தேர்தலுக்குள் அவை முழுவது மாக நிறைவேற்றப்பட்டன.
காவிரி நதிநீர் பிரச்சினையில் கடந்த 1976-ல் அப்போதைய திமுக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட் டது. பிரதமராக இருந்த இந்திரா காந்தி அழைத்துப் பேசியதால், வழக்கை வாபஸ் பெற்றீர்கள். ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து போராடி, கடந்த 2013-ல் காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதி உத்தரவை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தார்.
முல்லை பெரியாறு விவகாரத் திலும் அணையின் நீர்த்தேக்க உயரத்தை 136-ல் இருந்து 142 அடி யாக உயர்த்தச் செய்தார். அத்திக் கடவு அவிநாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கி திட்டத்தை செயல்பட வைத்துள்ளார். இதனால்தான், கொங்குமண்டலம் எப்போதும் அதிமுக கோட்டையாக விளங்கு கிறது.
மறைந்த முதல்வர் ஜெய லலிதா தன் உடல்நலத்தைக்கூட பார்க்காமல் மக்களுக்காக உழைத்து திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றினார். பல நல்ல திட்டங் களைக் கொண்டுவந்ததன் மூலம், மக்கள் மனதில் அவர் நீக்கமற நிறைந்துள்ளார். 1998-ல் நாடாளு மன்றத் தேர்தல் முடிந்ததும் அப் போதைய பிரதமர் வாஜ்பாயை சந்தித்த ஜெயலலிதா, ‘இவர் என்னை தாயாக இருந்து பார்த்துக் கொள்கிறார்’ என சசிகலாவை அறிமுகப்படுத்தினார்.
அதிமுகவை தகர்த்துவிடலாம் என்று சிலர் கனவு கண்டனர். ஜனவரியில் ஆட்சி மாறும் என்றும் சிலர் பேசினர். அதிமுக எஃகு கோட்டை. அதை யாராலும் எதுவும் செய்ய முடியாது. அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் பதவிக்காக இல்லாமல், கட்சிக்காகவே உழைத்து வருகின்றனர்.