தமிழகம்

கலாம் மணிமண்டபம் கட்ட கூடுதல் நிலத்துக்கான ஆய்வு

செய்திப்பிரிவு

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு ராமேசுவரம் பேக்கரும்பு நினைவிடத்தில் மணி மண்டபம் கட்டும் பணிக்கு மத்திய அரசின் சார்பில் வரும் 27-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட உள்ளதால் அதற்கான அடிப்படை ஆய்வுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அப்துல் கலாம் கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையா டிக்கொண்டு இருந்தபோது கால மானார். அவரது உடல் கலாமின் பிறந்த ஊரான பேக்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட் டது. பேக்கரும்பில் கலாமுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என கடந்த அக்.15-ல் கலாமின் பிறந்த நாளில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கலாம் மணிமண்டப் பணிகளுக்காக ரூ.60 கோடி அறிவிக்கப்பட்டு முதற்கட்டமாக ரூ.30 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. தற்போது பேக்கரும்பு நினைவிடத் தில் சுற்றுச் சுவர் அமைக்கும் பணிகள் நிறை வடைந்துள்ளன.

கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பாதுகாப்புப் படையின் அதிகாரிகள் பேக்கரும்பு நினைவி டத்தை பார்வையிட்டனர். “கலாம் நினைவிடத்தில் அறிவுசார் மையம், நூலகம், அருங்காட்சியகம், அரங் கம், பூங்கா, வாகனம் நிறுத்து மிடம், அலுவலகம் ஆகியவற்றை அமைக்க பேக்கரும்பில் தமிழக அரசு ஒதுக்கித் தந்த 1.36 ஏக்கர் நிலம் போதாது.

மேலும் கூடுத லாக 6 முதல் 7 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதனை தமிழக அரசுக்கு தெரிவித் துள்ளோம்” என அறிவித்தனர்.

தொடர்ந்து கலாமின் முதலாம் நினைவு நாளான ஜூலை 27-ல் பேக்கரும்பு நினைவிடத்தில் 7 அடி உயர வெண்கலத்தாலான கலாமின் முழு உருவச் சிலை திறக் கப்பட உள்ளது. இதற்கான பீடம் அமைக்கும் பணிகள் பேக் கரும்பு கலாம் நினைவிடத்தில் நடைபெற்று வருகின்றன. வெண்கல சிலை தயாரிக்கும் பணி சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே கலாமின் மு தலாமாண்டு நினைவு நாளான ஜூலை 27-ம் தேதி ராமேசுவரம் கலாம் நினைவிடத்தில் மணிமண் டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் மாநிலங்கள வையில் அறிவித்துள்ளார்.

மேலும் விழாவில் பிரதமர் கலந்துகொள் ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளதால் தமிழக அரசின் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூடுதல் நிலம் கை யகப்படுத்துவதற்காக பேக்கரும் பில் நேற்று ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT