அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு ஆதரவாக சுப்பிர மணியன் சுவாமி பேசி வந்தார். சசிகலாவுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க ஆளுநர் காலதாம தம் செய்து வருவதாக விமர்சித்தார்.
இந்நிலையில், சென்னை ராஜ் பவனில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சுப்பிரமணியன் சுவாமி, நேற்றிரவு 7 மணியளவில் சந்தித்துப் பேசினார். சந்திப்பு முடிந்து சுப்பிரமணியன் சுவாமி வந்ததும் அவரிடம் பேட்டி எடுக்க ஆளுநர் மாளிகை பிரதான வாயி லில் பத்திரிகையாளர்கள் காத் திருந்தனர். ஆனால், பத்திரிகை யாளர்களை சந்திக்காமல் பின்புற வாயில் வழியாக சுவாமி புறப்பட்டுச் சென்றார்.
ஆளுநரை மரியாதை நிமித் தமாக சுப்பிரமணியன் சுவாமி சந்தித்துப் பேசியதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.