திருநெல்வேலி மற்றும் மாவட்டத் தின் பல இடங்களில் நேற்று `கருவின் குற்றமே… காத்திருக்கும் ஸ்பெக்ட்ரமே’ என்ற தலைப்பில் அதிமுக இளைஞர் பாசறை சார்பில் பிளக்ஸ் போர்டு கள் வைக்கப்பட்டிருந்தன. திமுக தலைவர் கருணாநிதியை குறித்த கேலிச் சித்திரங்களும், அவரை தனிப்பட்ட விதத்தில் விமர்சிக்கும் கவிதைகளும் இடம்பெற்றிருந்தன. இது திமுக-வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
போர்டுகளை அகற்ற வலி யுறுத்தி திருநெல்வேலி மாநகர திமுக பொறுப்பாளர் மு.அப்துல் வகாப், மாணவர் அணி அமைப் பாளர் அருண்குமார் உள்ளிட்ட திமுக-வினர், மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனு விவரம்:
திமுக தலைவர் கருணாநிதியை அவதூறாகவும், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு குறித்தும் டிஜிட்டல் போர்டுகளை வைத்துள்ளனர். அவற்றை அகற்றுவதுடன், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. ஆனால், போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து, அப்துல்வகாப் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி முன் மறிய லில் ஈடுபட்டனர். திருவனந்தபுரம் சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
காவல்துறை உதவி ஆணையர் மாதவன், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். போர்டை அகற்றினால் போராட் டத்தை கைவிடுவதாக திமுக-வினர் தெரிவித்தனர். போர்டு அகற் றப்படும் என உறுதி அளிக்கப் பட்டதைத் தொடர்ந்து, மறியலை கைவிட்ட திமுக-வினர், போர்டை அகற்றும்வரை அங்கேயே இருப் போம் என்று கூறி சாலையோரம் நின்றுகொண்டனர்.
போலீஸார் அறிவுறுத்தலின் பேரில் போர்டை அகற்ற அதிமுக-வினர் வந்தனர். அப்போது அவர் களைப் பார்த்து திமுக-வினர் கண்டன கோஷங்களை எழுப் பினர். அவர்களை நோக்கி அதிமுக-வினர் முன்னேற, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கவும் முயற்சித்தனர். போலீஸார் இருதரப்பினரை யும் தடுத்து, அங்கிருந்து கலைந்துபோகச் செய்தனர்.