தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும்: தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் வரும் உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டி யிடுகிறது என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் அவர் கூறியதாவது: காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் பெற்று தந்திருப்பது ஆறுதலான விஷயம். ஆனால் தமிழக அரசு இதில் விரைவாக செயல்பட்டிருந்தால் இத்தனை பிரச்சினைகள் வந்தி ருக்காது. தற்போது திறந்துவிடப் பட்டுள்ள தண்ணீர் தமிழகத்துக்கு போதுமானதாக இல்லை. கடை மடை கால்வாய்வரை தண்ணீர் கிடைக்காது. நம்முடைய விவ சாயிகள் அடுத்த மாநில முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்க முடிகிறது. ஆனால் நம் மாநில முதல்வரை சந்திக்க முடியவில்லை. காவிரி பிரச்சினையில் நமது உரிமை களை பெற்று தருவதில் தமிழக அரசு தவறிவிட்டது.

உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும்.இதற்காக 234 தொகுதியிலும் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பதை தமிழக அரசு தடுத்திருக்கிறது. இது ஜனநாயக முறைப்படி சரியான நடவடிக்கை இல்லை என்றார் அவர்.

SCROLL FOR NEXT