தமிழகம்

கும்பகோணம் அருகே பட்டாசு ஆலை விபத்து: பலி 9 ஆக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

கும்பகோணம் அருகே பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில், உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே இருக்கிறது ஒழுகச்சேரி. இங்கு தகரக் கொட்டகை ஒன்றில் பட்டாசுத் தயாரிப்புப் பணி நடைபெற்று வந்த நிலையில், திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால், பயங்கர தீ பரவியது. இதில், அந்தக் கொட்டகை தரமட்டமானது.

உடனடியாக, தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில், 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டது.

காயமடைந்த 15 தொழிலாளர்கள் உடனடியாக கும்பகோணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் இருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இந்த வெடி விபத்து தொடர்பாக, காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT