தமிழகம்

ஓபிசி வகுப்பினருக்கு வங்கித் தேர்வுக்கு இலவச பயிற்சி: சென்னை, திருச்சியில் 3 நாட்கள் நடக்கிறது

செய்திப்பிரிவு

வங்கி அதிகாரி, எழுத்தர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கம், எம்பவர் அறக்கட்டளை, பெரியார் ஐஏஎஸ் அகாடமி சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதற்கான பயிற்சி வகுப்புகள் சென்னையிலும், திருச்சியிலும் 3 நாட்கள் நடைபெறும். சென்னையில் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் அக்டோபர் 7 முதல் 9-ம் தேதி வரையும், திருச்சியில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் அக்டோபர் 13 முதல் 15 வரையும் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படும்.

இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்பும் ஓபிசி வகுப்பினர் வங்கி தேர்வு விண்ணப்பத்தின் நகலை aiobc.coaching@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அல்லது “பொதுச் செயலாளர், யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட பணியாளர் நலச்சங்கம், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, 139, பிராட்வே, சென்னை 600 108” என்ற முகவரிக்கு அக்டோபர் 3-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 99406-69385, 94451-72814 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம்.

இந்த தகவலை யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட பணியாளர் நலச்சங்கப் பொதுச் செயலாளர் ஞா.மலர்க்கொடி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT