சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது:
வெப்ப சலனம் காரணமாக உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
தமிழகத்தில் நேற்று 10 நகரங்களில் வெப்பம் 100 டிகிரியைத் தாண்டியது. அதிகபட்சமாக வேலூரில் 109.4 டிகிரி ஃபாரன்ஹீட், திருச்சி, கரூர் பரமத்தியில் 107 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. சென்னை விமான நிலையம், தருமபுரி, மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருப்பத்தூரில் வெப்பம் 100 டிகிரியைத் தாண்டி பதிவாகியிருந்தது.