தமிழகம்

மருத்துவ நுழைவுத் தேர்வு கூடாது: தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - தி.க. தலைவர் கி.வீரமணி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என் பதால் நுழைவுத் தேர்வு கூடாது என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தி.க. தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வைக் கட்டாயமாக்கும் மசோதா இரு அவைகளிலும் நிறை வேற்றப்பட்டுள்ளது. இது மருத்துவராக விரும்பும் ஒடுக்கப் பட்ட சமுதாய மக்கள், ஏழை, எளிய முதல் தலைமுறைப் பிள்ளைகள் ஆசையில் மண்ணைப் போடும் சமூக நீதி விரோதப் போக்காகும். கல்வியை மாநிலப் பட்டியில் இருந்து பொதுப் பட்டியலுக்கு கொண்டு போனதன் முக்கிய தீய விளைவுகளில் இதுவும் ஒன்றாகும்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக ஆட்சியில் நுழைவுத் தேர்வு கூடாது என்ற நிறைவேற்றப்பட்ட சட்டம் இருக்கும்போது, உச்ச நீதிமன்றத்தில் சில நீதிபதிகள் இப்படி முடிவு செய்தது சமூக நீதிக்கும், மாநில உரிமைக்கும் எதிரானதல்லவா?

தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு மசோதாவை நாடாளு மன்றத்தில் கொண்டு வந்தபோது தமிழ்நாட்டைச் சேர்ந்த அதி முக, திமுக உறுப்பினர்கள் எதிர்த் துள்ளனர் என்பது ஒரு ஆறுதல் தருவதாக உள்ளது.

நுழைவுத் தேர்வை விரும்பும் மாநிலங்கள் நடத்தலாம். விரும் பாதவர்கள் நடத்த வேண்டிய அவசியமில்லை என்ற நிலைப் பாட்டை உறுதிப்படுத்த, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஓர் உறுதியான தீர்மானத்தை ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி இணைந்து ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும். தேசிய நுழைவுத் தேர்வு எனும் ஆபத்தை நிரந்தரமாக ஒழித்துக்கட்ட அனைத்துக் கட்சிகள், மாணவர்கள், பெற்றோர் ஓரணியில் திரண்டு போராட முன்வர வேண்டும் என்று கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT