சிறுமி பலாத்காரம் தொடர்பான இரு வழக்குகளில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை, 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சாவூர் மகளிர் விரைவு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் சாலிய மங்கலம் கொட்டகொல்லமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (25). இவர், கடந்த 2014, பிப்ரவரி 19-ம் தேதி, 15 வயது சிறுமியுடன் அம்மா பேட்டை அருகே சூழியக்கோட்டை சாலியமங்கலம் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அம்மா பேட்டை பகுதியைச் சேர்ந்த தர்மராஜன் (45), கலைமாறன் (34), சதீஷ்குமார் (23), சிவக்குமார் (27), மணிகண்டன் (22) ஆகிய 5 பேர், 2 பைக்குகளில் வந்து, பிரபு மற்றும் சிறுமியைத் தாக்கியதுடன், சிறுமியை பலாத்காரம் செய்துள்ள னர். பிரபு அளித்த புகாரின்பேரில், அம்மாபேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, 5 பேரையும் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட தர்மராஜன், கலைமாறன், மணிகண்டன் ஆகிய 3 பேருக்கும் தமிழ்நாடு குழந்தை கள் பாலியல் பலாத்காரத் தடுப்புச் சட்டப் பிரிவு 6-ன் கீழ் ஆயுள் தண் டனையும், தலா ரூ.1,000 அபராத மும், சதீஷ்குமார், சிவக்குமார் ஆகி யோருக்கு அதே சட்டப் பிரிவு 6 (34)-ன் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மற்றொரு வழக்கில்...
சாலியமங்கலம் கொட்ட கொல்லமேடு பகுதியைச் சேர்ந்த வர் பிரபு (25). இவர், அதே பகுதி யைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, திருமணம் செய்து கொள்வதாக அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைக் கூறி பல முறை அவரை பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், அம்மாபேட்டை போலீஸார் பிரபுவை கைது செய்தனர். தஞ்சாவூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பிரபுவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். முதல் வழக்கில் புகார் கொடுத்த பிரபுவும், இரண்டாவது வழக்கில் தண்டனை பெற்ற பிரபுவும், இவ்விரு வழக்குகளிலும் பலாத்காரத்துக்கு உள்ளான சிறுமியும் ஒரே நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.