தமிழக மீனவர்கள் மீது நடத் தப்பட்ட துப்பாக்கி சூட்டைக் கண் டித்தும், இலங்கை சிறையில் உள்ள 88 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்களின் 142 விசைப்படகுகளை மீட்கக் கோரியும் தொடர் வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட் டத்தை 6 மாவட்ட மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
நாகை, காரைக்கால், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்ட மீனவர்கள் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் நாகை மீன்பிடி துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது.
குடும்ப பாதுகாப்பு நிதி
இக்கூட்டத்தில், கடந்த 6-ம் தேதி இந்திய கடல் எல்லைப் பகுதி யில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறி துப் பாக்கியால் சுட்டதில் உயிரிழந்த மீனவர் பிரிட்ஜோவின் குடும்பத் தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வது, தமிழக அரசு வழங் கும் நிதியைப் பெற்றுக்கொள்வ தில்லை என்று ராமேசுவரம் போராட் டக்குழு முடிவு எடுத்துள்ளதால், அரசு நிதிக்கு பதிலாக அதே தொகையை மீனவர்களே பகிர்ந் தளித்து குடும்ப பாதுகாப்பு நிதியாக வழங்குவது, 6 மாவட்டங் களிலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது, மார்ச் 13-ம் தேதி முதல் நாகை, காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபடுவது என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.